Back

2 . Kaankindra Devan | காண்கின்ற தேவன்

E – min | 2 / 4 | T – 135 

காண்கின்ற தேவன் நம் தேவன்

காலமும் அவரைத் துதித்திடுவோம்

அல்லேலூயா – அல்லேலூயா – ( 2 ) 

1 . தம்மைத் தேடும் உணர்வுள்ளவன் 

தரணியில் எவரேனும் உண்டோ 

கர்த்தர் இயேசு காண்கின்றார்

கருத்தாய் அவரைத் தேடிடுவோம் ?

2 . ஆவியிலே நொறுக்கப்பட்டு 

ஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிற 

அன்பு இதயம் காண்கின்றார்

அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு

3 . உத்தம இதயம் கொண்டிருப்போம் 

உன்னத வல்லமை பெற்றிடுவோம் 

கர்த்தரின் கண்கள் பூமியெங்கும்

கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன 

அவரது கிருபைக்கு காத்திருந்தால் 

பஞ்ச காலத்தில் உணவளிக்க

பரிவாய் நம்மைப் பார்க்கின்றார் . 

We use cookies to give you the best experience. Cookie Policy