Back

203 . Neethimaan naan | நீதிமான் நான் 

203 . நீதிமான் நான் 

D – min / 6 / 8 & 2 / 4 / T – 125 

நீதிமான் நான் நீதிமான் நான் 

இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் – இயேசுவின் 

1 . பனைமரம் போல் நான் செழித்தோங்குவேன் 

கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன் 

கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டு 

முதிர்வயதிலும் நான் கனி தருவேன் 

2 . காலையிலே உம் கிருபையையும் 

இரவினிலே உம் சத்தியத்தையும் 

பத்து நரம்புகள் இசையோடு 

பாடிப் பாடி மகிழ்ந்திருப்பேன் 

3 . ஆண்டவனே என் கற்பாறை 

அவரிடம் அநீதியே இல்லை 

என்றே முழக்கம் செய்திடுவேன் 

செழுமையும் பசுமையுமாய் வளர்வேன் 

4 . இராஜாவின் ஆட்சி வருகையிலே 

கதிரவனைப் போல் பிரகாசிப்பேன் – இயேசு 

ஆகாயமண்டல விண்மீனாய் 

முடிவில்லா காலமும் ஒளிவீசுவேன்

We use cookies to give you the best experience. Cookie Policy