Back

206 . Malai mel yeri | மலை மேல் ஏறி

206 . மலை மேல் ஏறி

F – min  / 6 / 8 / T – 110 

மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே 

மறுரூபம் ஆகணுமே தகப்பனே – ஜெப 

உலகை மறக்கணுமே தகப்பனே 

உம் குரல் கேட்கணும் நாள்முழுதும் 

1 . காலையும் மாலையும் மதிய வேளையும் 

கைகள் உமை நோக்கி உயரணுமே 

அழியும் உலகத்திற்காய் கதறணுமே 

அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே 

2 . உமது வார்த்தைகள் உணவாய் மாறணும் 

ஒவ்வொரு நாளும் தியானிக்கணும் 

வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும் 

வெற்றிக் கீதங்கள் நான் பாடணும் 

3 . ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி 

தீர்க்கதரிசனம் சொல்லணும் 

ஆவிகள் பகுத்தறியும் வரம் வேண்டும் 

வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும்

We use cookies to give you the best experience. Cookie Policy