208 . உகந்த காணிக்கை
D – Maj / 3 / 4 | T – 150
உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனையா
சுகந்த வாசனையாய்
முகர்ந்து மகிழுமையா
1 . தகப்பனே உம் பீடத்தில்
தகனப்பலியானேன்
அக்கினி இறக்கிவிடும் .
முற்றிலும் எரித்துவிடும் – உகந்த
2 . வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே
3 . கண்கள் தூய்மையாக்கும்
கர்த்தா உமைப் பார்க்கணும் – என்
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம் குரல் கேட்கணும் – என்