213. மேகமே மகிமையின்
E – Maj / 3 / 4 / T – 90
மேகமே மகிமையின் மேகமே – இந்த
நாளிலே இறங்கி வாருமே
மேகமே மகிமையின் மேகமே
வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே
1 . ஏகமாய் துதிக்கும் போது
இறங்கின மேகமே
ஆலயம் முழுவதும்
மகிமையால் நிரப்புமே
2 . வானம் திறக்கணும்
தெய்வம் பேசணும்
நேச மகனென்று ( மகளென்று )
நித்தம் சொல்லணும்
3 , மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே
முகங்கள் மாறணுமே
ஒளிமயமாகணுமே
4 , வாழ்க்கைப் பயணத்திலே
முன்சென்ற மேகமே
நடக்கும் பாதைதனை
நாள்தோறும் காட்டுமே
5 . கையளவு மேகம் தான்
பெருமழை பொழிந்தது
என் தேச எல்லையெங்கும்
பெருமழை ( அருள்மழை ) வேண்டுமே