Back

214 . Unga uzhliyam | உங்க ஊழியம் 

214 . உங்க ஊழியம் 

C – min / 3 / 4 | T – 94 

உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்

அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க 

1 . திட்டங்கள் தருபவரும் நீர்தானையா 

செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா 

எஜமானனே என் ராஜனே 

எஜமானன் நீர் இருக்க 

வேலைக்காரனுக்கு ஏன் கவலை 

2 , எலியாவை காகம் கொண்டு போஷித்தீரே

சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே

தெய்வமே பேசும் தெய்வமே 

எலியாவின் தேவன் இருக்க 

எதுவும் என்னை ஆசைப்பதில்லை 

3 . பவுலையும் சீலாவையும் பாட வைத்தீரே 

சிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரே 

கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன

காக்கும் தெய்வம் நீர் இருக்க 

கவலை பயம் எனக்கெதற்கு 

4 . ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கிறேன் 

ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர் 

நல் ஆயனே என் மேய்ப்பரே

என் ஆயன் நீர் இருக்க 

ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை 

5 . இகப்பன் இன் Sisiளைகளை சுமப்பது போல 

இதுவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர் 

தகப்பனே தாங்கும் தெய்வமே 

தகப்பன் நீர் இருக்கையிலே 

இல்லை எனக்கு என் வேலை

We use cookies to give you the best experience. Cookie Policy