217 . ஜெபம் கேளும்
E – Maj / 34 / T – 140
ஜெபம் கேளும் பதில் தாரும்
அதிசயம் செய்யும் ஐயா
1 . நூறு கோடி என் ஜனங்கள்
ஏழுலட்சம் கிராமங்கள்
இயேசுவைக் காண வேண்டும்
2 . உமக்கெதிராய் செயல்படுவோர்
உம் பாதம் வர வேண்டும்
உமக்காய் வாழ வேண்டும்
3 , இந்தியாவைப் பாழாக்கும்
அந்தகார வல்லமைகள்
அகன்று போக வேண்டும்
4 . நாடாளும் தலைவர்களை
நாள்தோறும் பாதுகாத்து
ஞானத்தால் நிரப்ப வேண்டும்
5 . மரித்துப் போன மனிதரெல்லாம்
உம் குரலைக் கேட்டு இன்று .
மறுவாழ்வு பெற வேண்டும்
6 . மிஷனரி ஊழியர்கள்
மென்மேலும் பெருக வேண்டும்
உண்மையாய் உழைக்க வேண்டும்
7 . சிலைகள் வழிபாடு
செயலற்றுப் போக வேண்டும்
நற்செய்தி பரவ வேண்டும்
8 . ஆளும் தலைவர்கள் கூட்டம்
உம் நாமம் சொல்ல வேண்டும்
உமக்கே அஞ்ச வேண்டும்