F – Maj / 6 / 8 / T – 110
இம்மட்டும் கைவிடா தேவன்
இனியும் கைவிட மாட்டார்
தாயின் வயிற்றில் தாங்கினார்
ஆயுள் முழுதும் தாங்குவார்
தாங்குவார் தப்புவிப்பார்
ஏந்துவார் என் தெய்வம்
1 . ஆயன் இயேசு ஆடு நான்
ஆதலால் பயமில்லை
சாத்தான் பறிக்க முடியாது
சபிக்கின்றேன் இயேசு நாமத்தில் – தாங்குவார்
2 . இயேசு கிறிஸ்து வசனத்தால்
எல்லா நாளும் சந்தோஷம்
வியாதி வறுமை வேதனை
எது தான் பிரிக்க முடியுமோ ?
3 . கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
கலக்கம் எனக்கு இனியில்லை
துதித்து துதித்து நாளெல்லாம்
துரத்திடுவேன் சத்துருவை