Back

226 . Nallathayae Naan | நல்லதையே நான்

226 . நல்லதையே நான்

F – min / 4 / 4 / T – 96 

நல்லதையே நான் சொல்லவும் செய்யவும் 

உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா 

1 . ஆதி முதல் என்னைத் தெரிந்து கொண்டீர் 

அப்பாவை நம்பி மீட்படைய 

ஆவியினாலே தூய்மையாக்கி 

அதிசயமாய் என்னை நடத்துகிறீர்

அப்பா . . . . நன்றி . . . நன்றி – 2 

2 . பாவங்கள் செய்து மரித்துப் போயிருந்தேன் 

கிறிஸ்துவோடே கூட உயிர்த்தெழச் செய்தீர் 

கிருபையினாலே என்னை இரட்சித்தீர் 

உன்னதங்களிலே உட்காரச் செய்தீர் 

3 . ஆண்டவர் கிறிஸ்துவின் மகிமையடைந்திட 

அழைத்தீரே நன்றி ஐயா 

ஆறுதல் தந்தீர் அன்பு கூர்ந்தீர் 

பரலோகம் எதிர்நோக்கி வாழச் செய்தீர் 

4 . துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே 

பெருமையும் புகழ்ச்சியும் உமக்குத்தானே 

ஞானமும் நன்றியும் வல்லமையும் 

என்றென்றும் உமக்கே உரித்தாகட்டும்

We use cookies to give you the best experience. Cookie Policy