227 . இராஜாதி இராஜா
E – min / 6 / 8 / T – 125
இராஜாதி இராஜாவைக் கொண்டாடுவோம்
நாள்தோறும் துதிப்பாடி கொண்டாடுவோம் – நம்
1 . வந்தாரே தேடி வந்தாரே
தன் ஜீவன் எனக்காய் தந்தாரே
என்னை வாழ வைக்கும் தெய்வம்தானே இயேசு
என்னை வழிநடத்தும் தீபம் தானே இயேசு – அந்த
2 , கலக்கம் இல்லே எனக்குக் கவலை இல்லே
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்
என்னைப் பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார்
நான் பசியாற உணவு ஊட்டி மகிழுவார் – அந்த
3 . வென்றாரே சாத்தானை வென்றாரே
வல்லமைகள் அனைத்தையும் உரிந்தாரே
அந்த சாத்தான் மேலே அதிகாரம் தந்தாரே
என் இயேசு நாமம் சொல்லிச் சொல்லி முறியடிப்பேன் – நம்
4 . கரங்களிலே என்னைப் பொறித்து உள்ளார்
கண் முன்னே தினம் என்னை நிறுத்தியுள்ளார்
ஏற்ற காலத்திலே உயர்த்துவார் – அவர்
கரங்களுக்குள் அடங்கி நான் காத்திருப்பேன்
5 . முடிவில்லாத தம் மகிமையிலே
பங்கு பெற என்னைத் தெரிந்து கொண்டார்
என்னை சீர்ப்படுத்தி ஸ்திரப்படுத்தி நடத்துவார்
பெலப்படுத்தி நிலைநிறுத்தி மகிழுவார்