Back

23 . Anbin Deivam | அன்பின் தெய்வம்

E – min | 2 / 4 / T – 122 

அன்பின் தெய்வம் இயேசு 

ஆறுதல் தருபவர் 

மார்பில் சாய்கின்றேன் 

மகிழ்ந்து பாடுவேன் – 2

1 . பாதை இழந்த ஆடாய் 

பாரினில் ஓடினேன் 

சிலுவை அன்பினாலே 

திசையும் புரிந்தது 

வாழ்வது நானல்ல 

இயேசு வாழ்கின்றார் – என்னில்

2 . இயேசு பேசும்போது – என் 

உள்ளம் உருகுதே அவர்

வார்த்தை படிக்கும்போது – என் 

வாழ்வு மாறுதே 

வேதம் ஏந்துவேன் 

வெல்வேன் அலகையை – தினம் 

3 . கண்ணீர் சிந்தும்போது – மனக் 

கண்ணில் தெரிகின்றார் 

கவலை நெருக்கும்போது – அவர் 

கரத்தால் அணைக்கின்றார் 

ஆவி பொழிகின்றார் 

ஆற்றல் தருகின்றார் – எனக்கு 

We use cookies to give you the best experience. Cookie Policy