235 . அப்பா என்னை
E – Maj / 6 / 8 / T – 90
அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா
உயிரோடிருக்கும் நாளெல்லாம்
உமக்குச் சொந்தமையா
அர்ப்பணித்தேன் ( நான் ) அர்ப்பணித்தேன்
ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் – என் அ
1 . உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையா
கள்ளம் கபடு இல்லாமல் காத்துக் கொள்ளுமையா – ஒரு
2 . உலகப்பெருமை சிற்றின்பம் உதறிவிட்டேனையா
கசப்பு வெறுப்பு காயங்கள் கடந்து போனதையா
3 . வாக்குவாதம் பொறாமை ( பொறாமைகள் )
தூக்கி எறிந்தேன் நான்
ஆண்டவர் இயேசுவை ஆடையாய்
அணிந்து கொண்டேன் நான்
4 . உமக்காய் வாழும் வைராக்கியம்
உள்ளத்தில் வந்ததையா
எனக்காய் வாழும் எண்ணங்கள்
என்றோ மடிந்ததையா