Back

237 . Thunbama thuyarama | துன்பமா துயரமா

237 . துன்பமா துயரமா 

E – Maj / 6 / 8 / T – 110 

துன்பமா துயரமா அது தண்ணீர்பட்ட உடை 

போன்றதம்மா 

காற்றடிச்சா வெயில் வந்தா 

காய்ந்து போய்விடும் கலங்காதே 

1 . இயேசுதான் நீதியின் கதிரவன் ( அவர் ) 

உனக்காக உதயமானார் உலகத்திலே 

நம்பிவா , வெளிச்சம் தேடி வா 

உன் துக்க நாட்கள் இன்றோடு முடிந்தது 

2 , இழந்து போனதைத் தேடி இயேசு வந்தார் 

இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னார் 

எழுந்து வா , போதும் பயந்தது . . . . . . உன் 

புயல்காற்று இன்றோடு ஓய்ந்தது 

3 . உன் துக்கங்கள் இயேசு சுமந்து கொண்டார் 

உன் பிணிகள் எல்லாம் ஏற்றுக் கொண்டார் 

நீ சுமக்க இனி தேவையில்லை 

ஒரு சுகவாழ்வு இந்நாளில் துளிர்த்தது 

4 . இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு இல்லை 

இயேசு நாமம் சொல்லாமல் மீட்பு இல்லை 

கூப்பிடு , இயேசு இயேசு என்று 

உன் குறைகளெல்லாம் நிறைவாக்கி நடத்திடுவார்

We use cookies to give you the best experience. Cookie Policy