Back

24 . Engal Devan | எங்கள் தேவன்

E – Maj / 2 / 4 / T – 130

எங்கள் தேவன் வல்லவரே 

இன்றும் என்றும் காப்பவரே 

வல்லவர் சர்வ வல்லவர்

நல்லவர் என்றும் நல்லவர் – அல்லேலூயா 

1 . தீயின் நடுவே நடந்தாலும் 

எரிந்து போகமாட்டோம் 

கடலின் நடுவே நடந்தாலும் 

மூழ்கிப் போகமாட்டோம் – வல்லவர்

 

2 . சோதனை துன்பம் சூழ்ந்தாலும் 

சோர்ந்து போவதில்லை 

வேதனை வியாதி நெருக்கினாலும் 

வெற்றி சிலுவையுண்டு

3 . அலகை அனுதினம் தாக்கினாலும் 

ஆண்டவர் வார்த்தையுண்டு

உலகம் நம்மை வெறுத்தாலும் உன்னதர் கரங்களுண்டு 

We use cookies to give you the best experience. Cookie Policy