E – Maj / 2 / 4 / T – 130
எங்கள் தேவன் வல்லவரே
இன்றும் என்றும் காப்பவரே
வல்லவர் சர்வ வல்லவர்
நல்லவர் என்றும் நல்லவர் – அல்லேலூயா
1 . தீயின் நடுவே நடந்தாலும்
எரிந்து போகமாட்டோம்
கடலின் நடுவே நடந்தாலும்
மூழ்கிப் போகமாட்டோம் – வல்லவர்
2 . சோதனை துன்பம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போவதில்லை
வேதனை வியாதி நெருக்கினாலும்
வெற்றி சிலுவையுண்டு
3 . அலகை அனுதினம் தாக்கினாலும்
ஆண்டவர் வார்த்தையுண்டு
உலகம் நம்மை வெறுத்தாலும் உன்னதர் கரங்களுண்டு