240 . வல்லமையின்
D – min / 6 / 8 / T – 135
வல்லமையின் ஆவியானவர் – என்னுள்
வந்து விட்ட காரணத்தினால்
பொல்லாத சாத்தானை – ஒரு
சொல்லாலே விரட்டி விட்டேன்
1 . பவர் ( Power ) ஆவி எனக்குள்ளே – அந்த
பய ஆவி அணுகுவதில்லை
அன்பின் ஆவி எனக்குள்ளே – நான்
அகற்றிவிட்டேன் கசப்புக்களை
2 , கட்டுப்பாட்டின் ஆவியானவர்
என்னை கன்ட்ரோல் ( Control ) பண்ணி நடத்துகிறார்
இஷ்டம் போல அலைவதில்லை
அவர் சித்தம் செய்து வாழ்பவன் நான்
3 . கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்
தெருத் தெருவா மணம் வீசுவேன்
மீட்பு பெறும் அனைவருக்கும் – நான்
வாழ்வளிக்கும் வாசனையானேன்
4 . உலகத்திற்கு வெளிச்சம் நான்
ஊரெல்லாம் டார்ச் ( Torch ) அடிப்பேன்
உப்பாக பரவிடுவேன் – நான்
எப்போதும் சுவை தருவேன்
5 . கர்த்தரின் முத்திரை என் மேல் – நான்
முற்றிலும் அவருக்குச் சொந்தம்
அச்சாரமாய் ஆவியானவர் – நான்
நிச்சயமாய் மீட்பு பெறுவேன்
6 . தேவனாலே பிறந்தவன் நான்
எந்த பாவமும் செய்வதில்லை
கர்த்தரே பாதுகாக்கிறார்
தீயோன் என்னை தீண்டுவதில்லை
7 . கடவுள் எனக்கு வாக்களித்ததை
நிறைவேற்ற வல்லவரென்று
நிச்சயமாய் நம்பினதாலே – நான்
நம்பிக்கையில் வல்லவனானேன் ( வளர்கின்றேன் )