Back

241 . Thaneerkal | தண்ணீர்கள் 

241 . தண்ணீ ர்கள் 

D – min / 6 / 8 | T – 95 

தண்ணீர்கள் கடக்கும் போது 

என்னோடு இருக்கின்றீர் 

அக்கினியில் நடக்கும் போது கூடவே வருகின்றீர் 

மூழ்கிப் போவதில்லை – ( நான் ) 

எரிந்து போவதில்லை 

1 . என் மேல் அன்பு கூர்ந்து 

எனக்காய் இரத்தம் சிந்தி 

என் பாவம் கழுவி விட்டீரே 

எனக்கு விடுதலை தந்து விட்டீரே 

நன்றி ஐயா , நன்றி ஐயா 

2 . உமது பார்வையிலே 

விலையேறப் பெற்றவன் ( பெற்றவள் ) நான் 

மதிப்பிற்கு உரியவன் நானே – இன்று 

மகிழ்வுடன் நடனமாடுவேன் 

3 . பாலைவன வாழ்க்கையிலே 

பாதைகள் காணச் செய்தீர் 

ஆறுகள் ஓடச் செய்தீரே – தினம் 

பாடி மகிழச் செய்தீரே 

4 . பெற்ற தாய் தனது 

பிள்ளையை மறந்தாலும் 

நீர்என்னை மறப்பதில்லையே – உமது 

உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர் 

5 . என்னைப் படைத்தவரே 

உருவாக்கி மகிழ்ந்தவரே 

பெயர் சொல்லி அழைத்துக் கொண்டீரே 

உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே

We use cookies to give you the best experience. Cookie Policy