Back

242 . Ennai Kakavum | என்னைக் காக்கவும்

242 . என்னைக் காக்கவும் 

C – Maj / 6 / 8 / T – 116 

என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும் 

எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம் 

எனக்காய் யுத்தம் செய்து 

இரட்சித்து வழிநடத்த 

என்னோடு வருபவரே ஸ்தோத்திரம் 

1 . ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால் 

ஏழு வழியாக துரத்திடுவீர் 

2 . வறட்சி காலங்களில் திருப்தியாக்கி 

எலும்புகளை வலிமை ஆக்குகிறீர் 

3 . போரிட கைகளுக்கு பயிற்சி தந்து 

விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர் 

4 . நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்க 

கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே 

5 . காலைதோறும் என்னை எழுப்புகிறீர் 

கர்த்தர் உம் குரல் கேட்கப் பேசுகிறீர் 

6 . சத்தியமே உம்மை அறிந்து கொள்ள 

புத்தியைத் தந்தீரே நன்றி ஐயா 

7 . புலம்பலை ஆனந்தமாக மாற்றுகிறீர் 

சாக்கு ஆடைகளை நீக்குகிறீர்

We use cookies to give you the best experience. Cookie Policy