243 . என்னை நடத்தும்
D – Maj / 4 / 4 / T – 80
என்னை நடத்தும் இயேசு நாதா
உமக்கு நன்றி ஐயா
எனக்குள் வாழும் எந்தன் நேசா
உமக்கு நன்றி ஐயா
1 . ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
அழிவில் நின்று பாதுகாத்தீர்
உமக்கு நன்றி ஐயா
2 . தேடி வந்தீர் பாட வைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
ஓடி ஓடி உழைக்கச் செய்தீர்
உமக்கு நன்றி ஐயா
3 . பாவமில்லா தூயவாழ்வு
வாழச் செய்பவரே
பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி
மலரச் செய்பவரே
4 . துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
5 . கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
கவலை மாற்றி கரத்தால் அணைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
6 . உலகம் மாயை எல்லாம் மாயை
உணர்ந்தேன் உணர்ந்து கொண்டேன்
உறவு பாசம் குப்பையென்றறிந்து
உம்மையே பின் தொடர்ந்தேன்