Back

244 . En Uyirae | என் உயிரே 

244 . என் உயிரே 

G – Maj / 4 / 4 / T – 110 

என் உயிரே ஆண்டவரைப் போற்று 

முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று 

அவர் செய்த சகல உபகாரங்களை நீ 

ஒரு நாளும் மறவாதே – ஒரு போதும் மறவாதே 

1 . குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார் 

நோய்களைக் குணமாக்கி நடத்துகிறார் 

2 . படுகுழியினின்று விடுவிக்கிறார் 

இரக்கத்தை முடியாக சூட்டுகிறார் 

3 . வாழ்நாளெல்லாம் நன்மைகளால் 

நிறைவாக்கி நம்மை நடத்திச் செல்வார் ( நடத்துகிறார் ) 

4 . கழுகு போல் இளமையைப் புதுப்பிக்கிறார் 

காலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றார் 

5 . மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார் 

அதிசய செயல்கள் காணச் செய்தார் 

6 . இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்  

மிகுந்த கிருபையும் உள்ளவரே

We use cookies to give you the best experience. Cookie Policy