Back

247 . Pothumanavarae | போதுமானவரே 

247 . போதுமானவரே 

D – Maj / 3 / 4 | T – 110 

போதுமானவரே புதுமையானவரே 

பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே 

ஆராதனை ( 2 ) ஆயுளெல்லாம் ஆராதனை 

1 , எனக்காகத் தண்டிக்கப்பட்டீரே 

அதனால் நான் மன்னிக்கப்பட்டேன் 

எனக்காகக் காயப்பட்டீரே 

அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன் – ஆராதனை 

2 . எனக்காக புறக்கணிக்கப்பட்டீர் 

அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன் 

எனக்காக அவமானமடைந்து – ( உம் ) 

மகிமையிலே பங்கு பெறச் செய்தீர் – உமக்கு 

3 . பாவங்கள் சுமந்ததனால் நான் 

நீதிமானாய் மாற்றப்பட்டேன் – நீர் 

மரணத்தை நீர் ஏற்றுக் கொண்டதால் ( நித்திய ) 

ஜீவனை நான் பெற்றுக் கொண்டேன் ஐயா 

4 , சிலுவையிலே ஏழ்மையானதால் ( என்னை ) 

செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே – நீர் 

சாபங்களை சுமந்து கொண்டதால் நான் 

ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன் ஐயா – நீர்

We use cookies to give you the best experience. Cookie Policy