Back

248 . Indru Mudhal | இன்று முதல் 

248 . இன்று முதல் 

C – min / 4 / 4 / T – 120 

இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் 

எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன் 

1 . பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன் 

உனது பெயரை நான் உயர்த்திடுவேன் 

ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய் 

2 . செல்லும் இடமெல்லாம் 

காவலாய் நான் இருப்பேன் 

சொன்னதை செய்திடுவேன் கைவிடவே மாட்டேன் 

நீ வாழும் இந்த தேசம் உனக்குத் தந்திடுவேன் 

3 . பரவிப் பாய்கின்ற ஆறுகள் நீதானே 

நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானே 

வாசனை தருகின்ற சந்தனமும் நீதானே – 

4 , பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால் 

வானத்தின் பலகணிகள் திறந்திடுவேன் 

இடம் கொள்ளாத மட்டும் நிரப்பிடுவேன்

5 . வானத்து விண்மீன் போல ஒளி கொடுப்பாய் 

கடற்கரை மணலைப் போல பெருகிடுவாய் 

எதிரியின் வாசல்களை உரிமை ஆக்கிடுவாய் 

6 . நீரண்டை வளருகின்ற செடியும் நீதானே 

மதில் மேல் ஏறுகின்ற கொடியும் நீதானே 

பகை நிறைந்த உலகத்திலே 

அன்பு கரம் நீட்டிடுவாய் 

We use cookies to give you the best experience. Cookie Policy