Back

249 . Namakkoru thagapan | நமக்கொரு தகப்பன் 

249 . நமக்கொரு தகப்பன் 

D – Maj / 6 / 8 | T – 110 

நமக்கொரு தகப்பன் உண்டு 

அவரே நம் தெய்வம் 

எல்லாமே அவரிலிருந்து வந்தன 

நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம் 

1 . திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பன் இவர் 

தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர் 

உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார் 

அப்பா . . . . அப்பா . . . . தகப்பனே 

என்று கூப்பிடுவோம் 

2 . ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய் 

உருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வொரு நாளும் 

கேட்பதைக் கொடுத்திடுவார் 

தட்டும்போது திறந்திடுவார் 

3 . இரக்கம் நிறைந்த தந்தை அவர் 

ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர் 

கணவனை இழந்தவர்க்கு 

காப்பாளர் அவர் தானே

4 . குழந்தையாய் இருக்கும் போதே நேசித்தவர் 

எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டார் 

கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப்பழக்குகிறார் 

5 . அன்புக் கரங்களால் அணைத்துக் கொண்டார் 

பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக் கொண்டார் 

நுகத்தை அகற்றி விட்டார் ஜெயத்தைத் தந்து விட்டார் 

( பின்வருமாறும் பாடலாம் )

எங்கள் தகப்பனே எங்கள் தந்தையே 

எல்லாமே உம்மிடம் இருந்து வந்தன 

எந்நாளும் உமக்குத்தானே ஆராதனை 

1 . இரக்கம் நிறைந்த தந்தை நீரே 

ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று நீரே 

கணவனை இழந்தவர்க்கு 

காப்பாளர் நீர்தானையா 

அப்பா . . . . அப்பா . . . . தகப்பனே நன்றி ஐயா

We use cookies to give you the best experience. Cookie Policy