D – Min / 4/ 4 / T – 110
சாரோனின் ராஜா இவர்
பரிபூரண அழகுள்ளவர்
அன்புத் தோழனென்பேன் – ஆற்றும்
துணைவன் என்பேன்
இன்ப நேசரை நான் கண்டேன்
காடானாலும் மேடானாலும்
கர்த்தரின் பின்னே போகத் துணிந்தேன்
1 . சீயோன் வாசியே தளராதே
அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்
அன்பின் தேவன் மறக்கமாட்டார்
ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார் – காடானாலும்
2 . மலைகள் பெயர்ந்து போகலாம்
குன்றுகள் அசைந்து போகலாம்
மாறா தேவனின் புது கிருபை
காலை தோறும் நமக்கு உண்டு
3 . நேசரை அறியா தேசமுண்டு
பாசமாய் செல்ல யார்தானுண்டு
தாகமாய் வாடிடும் கர்த்தருக்காய்
சிலுவை சுமந்து பின்செல்வோர் யார்