Back

251 . Ninavu Koorum | நினைவு கூரும் 

251 . நினைவு கூரும் 

D – Maj / 6 / 8 / T – 105 

நினைவு கூரும் தெய்வமே நன்றி 

நிம்மதி தருபவரே நன்றி 

நன்றி இயேசு ராஜா ( 4 ) 

1 . நோவாவை நினைவு கூர்ந்ததால் 

பெருங்காற்று வீசச் செய்தீரே – அன்று 

தண்ணீர் வற்றியதைய்யா 

விடுதலையும் வந்ததைய்யா

2 . ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால் 

லோத்துவைக் காப்பாற்றினீரே 

எங்களையும் நினைவு கூர்ந்து 

எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா

3 . அன்னாளை நினைவு கூர்ந்ததால் 

ஆண்குழந்தை பெற்றெடுத்தாளே 

மலட்டு வாழ்க்கையெல்லாம் ( நீர் ) 

மாற்றுகிறீர் நன்றி ஐயா – எங்கள் 

4 . கொர்நேலியு தான தர்மங்கள் – ஒரு 

தூதனைக் கொண்டு வந்தது 

குடும்பத்தையும் நண்பர்களையும் 

இரட்சித்து அபிஷேகித்தீரே – அவன் 

5 . ராகேலை நினைவு கூர்ந்ததால் 

யோசேப்பை பரிசாய் தந்தீரே

இன்னுமொரு மகனைத் தருவீர் 

என்று சொல்லி துதிக்கச் செய்தீரே

6 . எக்காளம் ஊதும் போதெல்லாம் 

எங்களை நினைக்கின்றீர் 

எதிரிகளின் கையிலிருந்து 

இரட்சித்துக் காப்பாற்றுகிறீர்

We use cookies to give you the best experience. Cookie Policy