Back

253 . Kakum theivam | காக்கும் தெய்வம்

253 . காக்கும் தெய்வம் 

B – min / 4 / 4 | T – 100 

காக்கும் தெய்வம் இயேசு இருக்க 

கலக்கம் ஏன் மனமே ? 

கண்ணீர் ஏன் மனமே ? 

1 . இதுவரை உன்னை நடத்தின தேவன் 

இனியும் நடத்திச் செல்வார் 

எபிநேசர் அவர் தானே – ( 2 ) 

2 . சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும் 

தெரிந்துகொள் மனமே 

சீடன் அவன் தானே 

3 . பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில் 

கூடச் சென்றிடலாம் 

பாடி மகிழ்ந்திடலாம்
 

4 . காண்கின்ற உலகம் நமது இல்லை 

காணாத பரலோகம் தான் 

நமது குடியிருப்பு

We use cookies to give you the best experience. Cookie Policy