Back

255 . Ummil naan | உம்மில் நான் 

255 . உம்மில் நான் 

E – Maj / 3 / 4 | T – 140 

உம்மில் நான் வாழ்கிறேன் 

உமக்குள்ளே வளர்கிறேன் 

1 . ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளே 

வேர் கொண்டு வளரும் மரம் நானே 

படர்ந்திடுவேன் நிழல் தருவேன் 

பறவைகள் தங்கும் வீடாவேன் 

2 . அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல் 

அமைந்து உயரும் கட்டடம் நான் 

பெருங்காற்று அசைப்பதில்லை 

பெருமழையோ பிரிப்பதில்லை 

3 . இயேசுவே எனது தலையானீர் 

நானோ உமது உடலானேன் 

உம் நினைவு என் உணவு 

உம் விருப்பம் என் ஏக்கம் 

4 . செடியான உம்மோடு இணைந்துவிட்டேன் 

கொடியாய் படர்ந்து கனி தருவேன் 

இலைகளெல்லாம் மருந்தாகும் 

கனிகளெல்லாம் விருந்தாகும் 

5 . உமது வார்த்தை ( வார்த்தைகள் ) எனக்குள்ளே 

உந்தன் ஆவி என்னோடே 

மீட்பளிக்கும் நறுமணம் நான் 

கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன் 

We use cookies to give you the best experience. Cookie Policy