Back

257 . Akini | அக்கினி

257 . அக்கினி

 D – min | 2 / 4 | T – 130 

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் 

அபிஷேகம் தந்து வழி நடத்தும் 

1 . முட்செடி நடுவே தோன்றினீரே 

மோசேயை அழைத்துப் பேசினீரே 

எகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரே . 

எங்களை நிரப்பிப் பயன்படுத்தும் – இன்று 

2 . எலியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தீரே 

இறங்கி வந்தீர் அக்கினியாய்

இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே 

எங்களின் குற்றங்களை எரித்துவிடும் 

3 . ஏசாயா நாவைத் தொட்டது போல 

எங்களின் நாவைத் தொட்டருளும் 

யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே 

எங்களை அனுப்பும் தேசத்திற்கு

4 , அக்கினி மயமான நாவுகளாக 

அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே 

அந்நிய மொழியை பேச வைத்தீரே 

ஆவியின் வரங்களால் நிரப்பினீரே 

5 . இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய் 

இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே 

இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட 

எங்களை நிரப்பும் ஆவியினால்

We use cookies to give you the best experience. Cookie Policy