259 . உடலைக் கொடு
D – Maj / 6 / 8 / T – 110
உடலைக் கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய்
உன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய்
இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்
இதிலே தான் மகிமை அடைகிறார்
1 . ஒரு மணிநேரம் கொடுத்துப்பாரு
உன்னை தேவன் உயர்த்துவாரு
பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு
கடனில்லாமல் நடத்துவாரு
2 . நன்றிப்பாடல் தினமும் பாடு
நல்ல தேவன் வருவார் உன்னோடு
என்ன நடந்தாலும் நன்றி கூறிடு
தீமையை நன்மையால் தினமும் வென்றிடு
3 . தேசத்திற்காக தினம் மன்றாடு
பிறருக்காக பிராத்தனை செய்திடு
ஆளும் தலைவர்களை ஜெபத்தில் நினைத்திடு
அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும் –
4 . விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும்
விசுவாசி என்றும் பதறான் பதறான்
அறிக்கை செய்திடுவோம் எரிகோ பிடித்திடுவோம்
செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும்
5 . நாடெங்கும் சென்றிடு நற்செய்தி சொல்லிடு
வீடுகள் தோறும் விடுதலை கூறிடு
சபைகளை நிரப்பிடு சாட்சிகள் எழுப்பிடு
இரட்சகர் வருகைக்கு ஆயத்தமாக்கிடு