Back

26 . Devanae En Deva | தேவனே என்

E – Maj / 4 / 4 / T – 80

தேவனே என் தேவா 

உம்மை நோக்கினேன் 

நீரில்லா நிலம் போல 

உம்மைப் பார்க்கிறேன் 

1 . ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம் 

ஓடி வருகிறேன்

உம் வல்லமை மகிமை கண்டு 

உலகை மறக்கின்றேன்

2 . ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை 

எனக்குப் போதுமே

உதடுகளாலே துதிக்கின்றேன்

உலகை மறக்கின்றேன்

3 . படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன் 

இராச்சாமத்தில் தியானிக்கிறேன்

 உம் சிறகுகளின் நிழல்தனிலே 

உலகை மறக்கின்றேன் 

4 . எனது ஆன்மா தொடர்ந்து உம்மை 

பற்றிக் கொண்டது 

உம் வலக்கரமோ என்னை நாளும் 

தாங்கிக் கொண்டது . 

5 . வாழ்நாளெல்லாம் உம் நாமம் 

வாழ்த்திப் பாடுவேன் 

சுவையான உணவை உண்பதுபோல் 

திருப்தி அடைகின்றேன் 

We use cookies to give you the best experience. Cookie Policy