Back

261 . Sabayorae | சபையோரே 

261 . சபையோரே 

G – min / 6 / 8 | T- 125 

சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள் 

ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள் 

அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது 

அவரது இரக்கம் என்றும் உள்ளது 

1 , நம் தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோ 

தேவையான அனைத்தையும் மிகுதியாய் தருவார் 

அநேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார் 

கடன் வாங்காமல் வாழச் செய்திடுவார் 

2 . கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நாம் 

முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார் 

ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாதென்றார் 

ஒரு நாளும் அழிந்து போக விடமாட்டார் 

3 . நமது கர்த்தரோ உறைவிடம் ஆனார் 

இன்னல்கள் நடுவிலே மறைவிடம் ஆனார் 

விடுதலை கீதங்கள் பாட வைக்கின்றார் 

வெற்றிக் கொடி அசைத்து ஆடவைக்கின்றார் 

4 . சொந்த மகனென்று பார்க்காமலே 

நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே 

அவரோடு கூட மற்ற எல்லா நன்மைகளும் 

அருள்வார் என்பது நிச்சயம் தானே 

5 , தேவனாம் கர்த்தருக்கு ஊழியம் செய்தால் 

உணவையும் தண்ணீரையும் மிகுதியாய்த் தருவார் 

எல்லா நோய்களையும் அகற்றிடுவார்

குழந்தை பாக்கியமும் கொடுத்திடுவார்

We use cookies to give you the best experience. Cookie Policy