Back

262 . Ennai kakum | என்னைக் காக்கும்

262 . என்னைக் காக்கும் 

D – Maj | 4 / 4 | T – 110 

என்னைக் காக்கும் கேடகமே 

தலையை நிமிரச் செய்பவரே 

இன்று உமக்கு ஆராதனை 

என்றும் உமக்கே ஆராதனை 

1 . உம்மை நோக்கி நான் கூப்பிட்டேன் 

எனக்கு பதில் நீர் தந்தீரய்யா 

படுத்து உறங்கி விழித்தெழுவேன் 

நீரே என்னைத் தாங்குகிறீர் 

ஆராதனை ஆராதனை 

அப்பா அப்பா உங்களுக்குத்தான் 

2 . சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்கு 

அஞ்சமாட்டேன் அஞ்சவே மாட்டேன் 

விடுதலை தரும் தெய்வம் நீரே 

வெற்றிப் பாதையில் நடத்துகிறீர் 

3 . பக்தியுள்ள அடியார்களை 

உமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர் 

வேண்டும்போது செவிசாய்க்கின்றீர் 

என்பதை நான் அறிந்து கொண்டேன் 

4 . உலகப் பொருள் தரும் மகிழ்வை விட 

மேலான மகிழ்ச்சி எனக்கு தந்தீர் 

நீர் ஒருவரே பாதுகாத்து 

சுகமாய் வாழச் செய்கின்றீர் 

5 . உமது அன்பில் மகிழ்ந்திருப்பேன் 

உம்மோடுதான் நான் வாழ்ந்திடுவேன் 

எனக்கு நன்மை செய்தபடியால் 

நன்றிப் பாடல் பாடிடுவேன் 

We use cookies to give you the best experience. Cookie Policy