Back

263 . Malaimel | மலைமேல் 

263 . மலைமேல் 

E – min / 6 / 8 | T – 115

மலைமேல் ஏறுவோம் 

மரங்களை வெட்டுவோம் 

ஆலயம் கட்டுவோம் 

அவர் பணி செய்திடுவோம் 

நாடெங்கும் சென்றிடுவோம் 

நற்செய்தி சொல்லிடுவோம் 

சபைகளை நிரப்பிடுவோம் 

சாட்சியாய் வாழ்ந்திடுவோம்

1 . தேவனின் வீடு பாழாய்க்கிடக்குதே 

நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா 

2 . திரளாய் விதைத்தும் 

கொஞ்சமாய் அறுப்பதேன் 

வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன் 

3 . மனந்தளராமல் பணியைத் தொடருங்கள் 

படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம் 

4 . தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை 

அற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதே 

5 . ஜனங்கள் விரும்புகின்ற 

தலைவர் வந்திடுவார் 

மகிமையால் நிரப்பிடுவார் மறுரூபமாக்கிடுவார்

We use cookies to give you the best experience. Cookie Policy