264 . நெருக்கடி
D – Maj / 4 / 4 | T – 120
நெருக்கடி வேளையில் பதிலளித்து
பாதுகாத்து நடத்திடுவார்
உன்னோடு இருந்து ஆதரித்து
தினமும் உதவிடுவார்
1 . நீ செலுத்தும் காணிக்கைகள்
நினைவு கூர்ந்திடுவார்
நன்றி பலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக்கொள்வார்
2 . உன் மனம் விரும்புவதை
உனக்குத் தந்திடுவார்
உனது திட்டங்களெல்லாம்
நிறைவேற்றி முடித்திடுவார்
3 . உனக்கு வரும் வெற்றியைக் கண்டு
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
நம் தேவன் நாமத்திலே
வெற்றிக் கொடி நாட்டிடுவோம்
4 . இரதங்களை நம்பும் மனிதர்
இடறி விழுந்தார்கள் ,
தேவனை நம்பும் நாமோ
நிமிர்ந்து நின்றிடுவோம்