267 . என் உள்ளமே
E – Maj / 3 / 4 | T – 140
என் உள்ளமே இளைப்பாறிடு
இயேசப்பா உனக்கு நன்மை செய்தார்
1 . கால்கள் இடறாமல் காப்பாற்றினார்
சாவிலிருந்து விடுவித்தார்
2 . நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார்
ஊழியன் என்னையும் உயர்த்திவிட்டார்
3 . எளிய உள்ளத்தை பாதுகாத்தார்
தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார்
4 . மன்றாடும் போது செவிசாய்த்தார்
மறவாமல் உறவாடி மகிழச் செய்தார்
5 . விண்ணப்பம் கேட்டார் அன்புகூர்வேன்
விடுதலை தந்தார் நன்றி சொல்வேன்