268 . உன்னதமானவர்
D – Maj | 6 / 8 | T – 130
உன்னதமானவர் மறைவினிலே
சர்வ வல்லவர் நிழல்தனிலே
தங்கி உறவாடி மகிழ்கின்றேன்
எங்கும் வெற்றி நான் காண்கின்றேன்
லாலாலா – லல்லால . . . .
1 . ஆண்டவர் எனது அடைக்கலமானார்
நான் நம்பும் கோட்டையும் அரணுமானார்
வேடர் கண்ணிகள் கொள்ளை நோய்கள்
தப்புவித்து காப்பாற்றி தாங்குகிறார்
2 . தமது சிறகால் அரவணைக்கின்றார்
இறக்கையின் கீழே அமரச் செய்கின்றார்
சத்திய வசனம் எனது கேடகம்
நிச்சயம் நிச்சயம் விடுதலை உண்டு
3 . என் பக்கம் ஆயிரம்பேர் விழுந்தாலும்
பதினாயிரம் பேர் தாக்கினாலும்
பாதுகாப்பவர் என் பக்கத்திலே
பாதிப்பு இல்லையே பயமில்லையே
4 . செல்லும் இடமெல்லாம் என்னைக் காக்க
தமது தூதருக்கு கட்டளையிட்டார்
பாதம் கல்லிலே மோதாமலே
கைகளில் ஏந்திடுவார் தாங்கிடுவார்
5 . சிங்கத்தின் மீது நான் நடந்திடுவேன் .
சீறும் சர்ப்பங்களை மிதித்திடுவேன்
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்
சாத்தானை காலடியில் நசுக்கிடுவார்