269 . புகழ்கின்றோம்
D – Maj / 4 / 4 | T – 110
புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்
போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம்
உயர்த்துகிறோம் உன்னதரே
உயர்த்தி மகிழ்கின்றோம்
புகழ்கின்றோம் புண்ணியரே
புகழ்ந்து பாடுகின்றோம் – உம்மை
புகழ்ந்து பாடுகின்றோம்
1 . நூற்றுவத் தலைவனை தேற்றினீரே
வார்த்தையை அனுப்பி வாழ வைத்தீர்
விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர்
விண்ணக விருந்தில் இடம் கொடுத்தீர்
2 . கல்லறை லேகியோனை தேடிச் சென்றீர்
ஆறாயிரம் பேய்களை ஓடச் செய்தீர்
ஆடை அணிந்து அமரச் செய்தீர்
ஆர்வமாய் சாட்சி பகரச் செய்தீர்
3 . பெதஸ்தா குளத்து முடவனையே
படுக்கை எடுத்து நடக்கச் செய்தீர்
இனியும் பாவம் செய்யாதே என்று
எச்சரித்தீரே தேடிச் சென்று
4 . தோல்வியில் துவண்ட பேதுருவின்
படகில் ஏறி போதித்தீரே
படகு நிறைய மீன்கள் தந்தீர்
பாவநிலையை உணர வைத்தீர்
5 . மரத்தில் அமர்ந்த சகேயுவை
மனமிரங்கி நோக்கினீரே
இறங்கி வாரும் என்று அழைத்து
இரட்சிப்பு தந்து மகிழச் செய்தீர்
6 பர்த்திமேயு குருடனை பார்த்தீரே
பரிசுத்தர் உம்மையே பார்க்க வைத்தீர்
உந்தன் பின்னே நடக்க வைத்தீர்
உம்மை போற்றி புகழச்செய்தீர்
7 . மரித்த லாசருவின் கல்லறை முன்
மனதுருகி நீர் கண்ணீ ர் விட்டீர்
நம்பினால் அதிசயம் என்று சொல்லி
நாற்றத்தை மாற்றி நடக்க வைத்தீர்