Back

270 . Vineelum | விண்ணிலும் 

270 . விண்ணிலும் 

E – Maj / 6 / 8 | T – 96 

விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர 

எனக்கு யாருண்டு ? – இந்த 

மண்ணுலகில் உம்மையன்றி வேறு 

விருப்பம் எதுவுண்டு ? 

நீர்தானே என் வாஞ்சையெல்லாம் 

உம்மைத்தானே பற்றிக் கொண்டேன் 

1 . உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன் 

அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் 

நன்றி ஐயா , நாள் முழுதும் 

நல்லவரே , வல்லவரே 

2 . உம் சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்  

முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் 

3 . என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யா . . . 

எனக்குரிய பங்கும் என்றென்றும் நீர்தானய்யா 

4 . உம்மைத்தானே நான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன் 

உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியம் 

5 . எனக்குள்ளே நீர் , செயலாற்றி , மகிழ்கின்றீர் 

உம் சித்தம் செய்ய , ஆற்றல் தருகின்றீர்

We use cookies to give you the best experience. Cookie Policy