Back

273 . keethiyon nee | கிதியோன் நீ 

273 . கிதியோன் நீ 

E – Maj / 6 / 8 | T – 125 

கிதியோன் நீ கிதியோன் நீ 

தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் நீ
 

1 . உணவுக்குப் போராடும் தேசத்திலே 

உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே 

விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை 

விரட்டணுமே இயேசு நாமம் சொல்லி 

வாலிபனே வாலிபனே 

ஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா 

2 . தரித்திர ஆவிகளைத் துரத்தணுமே 

விக்கிரக ஆவிகளை விரட்டணுமே 

கர்த்தர் மனம் இறங்க கதறணுமே 

நாடு நலம் பெற ஜெபிக்கணுமே 

3 . சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடு 

பயம் இன்றி திருவசனம் அறிக்கையிடு 

மாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொடு 

புளியாத அப்பமாக மாறிவிடு

4 . இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுப்போ 

எதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்பாய் 

படைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால் 

பராக்கிரமசாலியே பயமே வேண்டாம்

We use cookies to give you the best experience. Cookie Policy