277 . உம்மை நான்
G – Maj | 3 / 4 | T – 140
உம்மை நான் போற்றுகிறேன் இறைவா
உம்மை நான் புகழ்கின்றேன் தேவா
போற்றி புகழ்கின்றேன்
வாழ்த்தி வணங்குகின்றேன்
1 . என்னைக் கைதூக்கி விட்டீர்
எதிரியின் மேல் வெற்றி தந்தீர்
உதவி தேடி வந்தேன்
உடல் சுகம் தந்தீரய்யா – ஆஆ
புகழ்ந்து பாடுவேன் ( வோம் )
மகிழ்ந்து கொண்டாடுவேன் ( வோம் )
2 . மாலைநேரம் அழுகையென்றால் ,
காலைநேரம் ஆனந்தமே –
நொடிப்பொழுது உந்தன் கோபம் ,
தயவோ வாழ்நாளெல்லாம்
3 . சாக்கு துணி களைந்து விட்டீர் ,
மகிழ்ச்சி உடை உடுத்தி விட்டீர்
புலம்பலை நீக்கி விட்டீர் ,
புதுப்பாடல் நாவில் வைத்தீர்
4 . என் உள்ளம் புகழ்ந்து பாடும்
( இனி ) மெளனமாய் இருப்பதில்லை
கர்த்தாவே என் தெய்வமே ,
கரம்பிடித்த மெய் தீபமே
5 . மலைபோல் நிற்கச் செய்தீர் ,
மாவேந்தன் உம் அன்பினால்
நிலைகலங்கி போனேன் ஐயா
நின் முகம் மறைந்தபோது
6 . புழுதி உம்மை புகழ முடியுமா ?
சத்தியம் சொல்ல அதனால் இயலுமா ?
என் மீது இரங்கும் ஐயா ,
எனக்குத் துணையாய் இரும்