279 . யார் பிரிக்க முடியும்
D – Maj | 6 / 8 | T – 90
யார் பிரிக்க முடியும் நாதா
உந்தன் அன்பிலிருந்து தேவா
1 . என் சார்பில் நீர் இருக்க
எனக்கெதிராய் யார் இருப்பார்
மகனையே நீர் தந்தீரய்யா
மற்ற அனைத்தும் தருவீர் ஐயா
2 . தெரிந்து கொண்ட உம் மகன் ( மகள் ) நான்
குற்றம் சாட்ட யார் இயலும்
நீதிமானாய் ஆக்கிவிட்டீர்
தண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே
3 . நிகழ்வனவோ வருவனவோ
வாழ்வோ சாவோ பிரித்திடுமோ
அன்பு கூர்ந்த ( என் ) கிறிஸ்துவினால்
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
4 . வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
பகைமைகளோ பழிச்சொல்லோ
பொறாமையோ பிரித்திடுமோ