281 . உம்மை புகழ்ந்து
D – Maj / 4 / 4 | T – 115
உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது
அது இனிமையானது ஏற்புடையது
1 . பாடல்கள் வைத்தீர் ஐயா
பாலகர் நாவிலே
எதிரியை அடக்க பகைவரை ஒடுக்க
இவ்வாறு செய்தீரய்யா
உந்தன் திருநாமம் அது
எவ்வளவு உயர்ந்தது – 2
2 . நிலாவைப் பார்க்கும்போது
விண்மீன்கள் நோக்கும்போது
என்னை நினைந்து விசாரித்து
நடத்த ( நான் ) எம்மாத்திரமையா
3 . வானதூதனை விட சற்று
சிறியவனாய் படைத்துள்ளீர்
மகிமை மாட்சிமை மிகுந்த
மேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர்
4 . அனைத்துப் படைப்புக்கள் மேல்
அதிகாரம் தந்துள்ளீர்
காட்டு விலங்குகள் மீன்கள்
பறவைகள் கீழ்ப்படியச் செய்துள்ளீர்