284 . கர்த்தரை துதியுங்கள்
F – Maj / 6 / 8 / T – 125
கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது
1 . ஒருவராய் மாபெரும் ,
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய் ,
உண்டாக்கி மகிழ்ந்தாரே
இன்று போற்றிப் புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் ( 2 )
2 . பகலை ஆள்வதற்கு ,
கதிரவனை உருவாக்கினார்
இரவை ஆள்வதற்கு ,
சந்திரனை உருவாக்கினார்
3 . செங்கடலை இரண்டாக ,
பிரித்து நடக்கச்செய்தார்
பார்வோனையும் படைகளையும்
அதிலே மூழ்கடித்தார்
4 . வனாந்திரப் பாதையில் ,
ஜனங்களை நடத்திச் சென்றார் –
எதிரியின் கையினின்று ,
விடுவித்துக் காத்துக்கொண்டார்
5 . தாழ்மையில் இருந்த ,
நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்
உடல் கொண்ட அனைவருக்கும்
உணவு ஊட்டுகிறார்