Back

285 . Paaduvaen | பாடுவேன் 

285 . பாடுவேன் 

E – min | 2 / 4 | T – 125

பாடுவேன் ( வோம் ) மகிழ்வேன் ( வோம் ) 

கொண்டாடுவேன் ( வோம் ) 

அப்பா சமூகத்தில் பாடி 

மகிழ்ந்து கொண்டாடுவேன் ( வோம் ) 

1 . அக்கினி மதில் நீரே 

ஆறுதல் மழை நீரே 

இக்கட்டில் துணை நீரே 

இருளில் வெளிச்சம் நீரே 

நன்றி நன்றி நன்றி – 2 

2 . துயர் நீக்கும் மருத்துவரே 

என் துதிக்குப் பாத்திரரே 

பெலனெல்லாம் நீர்தானையா ( என் ) 

பிரியமும் நீர்தானையா – என்

3 . கல்வாரி சிலுவையினால் – என் 

சாபங்கள் உடைந்ததையா 

ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் – ( இந்த ) 

அடிமைக்குக் கிடைத்ததையா 

4 . இயேசுவே உம் இரத்தத்தால் 

என்னை நீதிமானாய் மாற்றினீரே 

பரிசுத்த ஆவி தந்து – உம் 

அன்பை ஊற்றினீரே 

5 . உம்மையே நம்பி வாழ்வதால் 

உமக்கே சொந்தமானேன் – என் 

உயிரான கிறிஸ்து வந்ததால் – உம் 

உறவுக்குள் வந்துவிட்டேன்

6 . இவ்வுலகப் போக்கின்படி 

நான் வாழ்ந்தேன் பலநாட்கள் 

உம்மோடு இணைத்தீரைய்யா – உம் 

மிகுந்த இரக்கத்தினால் 

7 . வாழ்வு தரும் ஊற்று நீரே 

வழிகாட்டும் தீபம் நீரே 

புயலில் புகலிடமே – கடும் 

வெயிலில் குளிர் நிழலே 

8 . பேரின்ப நீரோடையில் 

என் தாகம் தணிப்பவரே 

உமது பேரன்பு – அது 

எத்தனை மேலானது

We use cookies to give you the best experience. Cookie Policy