286 . நீதியில்
F – Maj | 2 / 4 | T – 140
நீதியில் நிலைத்திருந்து – உம்
திருமுகம் நான் காண்பேன்
உயிர்த்தெழும் போது – உம்
சாயலால் திருப்தியாவேன்
1 . தேவனே , நீர் என் தேவன்
அதிகாலமே தேடி வந்தேன்
நீரின்றி வறண்ட நிலம்போல்
ஏங்குகிறேன் தினம் உமக்காய்
அல்லேலூயா ஓசன்னா ( 4 )
2 . ஜீவனை விட உம் அன்பு
அது எத்தனை நல்லது
புகழ்ந்திடுமே . என் உதடு
மகிழ்ந்திடுமே , என் உள்ளம்
3 , உயிர்வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்லித் துதிப்பேன்
அறுசுவை உண்பது போல
திருப்தியாகும் என் ஆன்மா
4 . படுக்கையிலே உம்மை நினைப்பேன்
இராச்சாமத்தில் தியானம் செய்வேன்
துணையாளரே , உம் நிழலை
தொடர்ந்து , நடந்து வளர்வேன் .