Back

287 . Ummunae | உம்முன்னே 

287 . உம்முன்னே 

C – min | 3 / 4 | T – 145 

உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு  

உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு 

நிறைவான மகிழ்ச்சி நீரே 

நித்திய பேரின்பமே 

1 . என்னைக் காக்கும் இறைவன் நீரே 

உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் 

என்னையாளும் தலைவர் நீரே , 

உம்மையன்றி ஆசை வேறில்லை 

என்னைக் காக்கும் இறைவன் நீரே 

அரசாளும் தலைவர் நீரே 

ஆராதனை உமக்கே 

நாளெல்லாம் ஆராதனை

2 . எனக்குரிய பங்கு நீரே 

பரம்பரை சொத்தும் நீரே 

ஆலோசனை தரும் தகப்பனே 

இரவும் பகலும் பேசும் தெய்வமே . 

எனக்குரிய பங்கு நீரே 

பரம்பரை சொத்தும் நீரே – ஆராதனை 

3 . எப்போதும் என் கண் முன்னே 

உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் 

வலப்பக்கத்தில் இருப்பதனால் 

அசைவுற விடமாட்டீர் 

எப்போதும் என் முன்னே 

உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் 

4 . என் இதயம் மகிழ்கின்றது 

என் உடலும் இளைப்பாறுது 

ஜீவமார்க்கம் எனக்குப் போதித்தீர் 

ஜீவனே , உம்மைப் பாடுவேன் 

என் இதயம் மகிழ்கின்றது 

என் உடலும் இளைப்பாறுது

We use cookies to give you the best experience. Cookie Policy