E – min / 4 / 4 / T – 108
இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்
நம் நோய்களைச் சுமந்து
கொண்டார் – இயேசு
1 . நம் பாவங்களுக்காய் காயப்பட்டார்
அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார்
நம்மை நலமாக்கும் தண்டனை
அவர் மேல் விழுந்தது .
அவருடைய காயங்களால்
குணமடைந்தோம் நாம்
2 . கொல்வதற்காய் இழுக்கப்படும்
ஆட்டுக்குட்டியைப் போல மயிர்
கத்திரிப்போன் முன்னிலையில்
கத்தாத செம்மறி போல
வாய்கூட அவர் திறக்கவில்லை
தாழ்மையுடன் அதை தாங்கிக் கொண்டார்
3. நம் பாவம் அனைத்தும் அகற்றி விட்டார்
இறைவனின் பிள்ளையாய் மாற்றிவிட்டார்
கழுமரத்தின் மீது தம் உடலில்
நம் பாவங்கள் அவர் சுமந்தார்