Back

291 . Andavarae Aalugai | ஆண்ட வர் ஆளுகை 

291 . ஆண்ட வர் ஆளுகை 

E – Maj / 2 / 4 | T – 135 

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் 

அனைத்து உயிர்களே பாடுங்கள் 

1 . மகிழ்வுடனே கர்த்தருக்கு 

ஆராதனை செய்யுங்கள் 

ஆனந்த சத்தத்தோடே  

திருமுன் வாருங்கள் 

ராஜாதி ராஜா வாழ்க வாழ்க 

கர்த்தாதி கர்த்தா வாழ்க வாழ்க 

எப்போதும் இருப்பவர் வாழ்க வாழ்க 

இனிமேலும் வருபவர் வாழ்க வாழ்க 

2 . எக்காள தொனி முழங்க 

இப்போது துதியுங்கள் 

வீணையுடன் யாழ் இசைத்து 

வேந்தனை துதியுங்கள் 

3 . துதியோடும் புகழ்ச்சியோடும் 

வாசலில் நுழையுங்கள் 

அவர் நாமம் உயர்த்திடுங்கள் 

ஸ்தோத்திர பலியிடுங்கள் 

4 . ஓசையுள்ள கைத்தாளத்தோடு  

நேசரை துதியுங்கள் 

சுவாசமுள்ள யாவருமே 

இயேசுவை துதியுங்கள் 

5 . நம் கர்த்தரோ நல்லவரே 

கிருபை உள்ளவரே 

நம்பத்தக்கவர் தலைமுறைக்கும்  

என்றென்றும் நம்பத்தக்கவர் 

6 . இயேசுவே நம் இரட்சகர் 

என்று முழங்கிடுங்கள் 

அவர் நமக்காய் ஜீவன் தந்தார் 

அவரின் ஆடுகள் நாம் 

7 , நடனத்தோடும் தம்புரோடும்  

நாதனைத் துதியுங்கள் 

மத்தளத்தோடும் குழல் ஊதி  

சப்தமாய்த் துதியுங்கள் 

We use cookies to give you the best experience. Cookie Policy