293 . கவலை
D – min | 4 / 4 | T – 100
கவலை கொள்ளாதிருங்கள் ( 2 )
உயிர் வாழ எதை உண்போம்
உடல் மூட எதை உடுப்போம் – என்று
1 . பறக்கும் பறவைகள் பாருங்கள்
விதைப்பதில்லை , அறுப்பதில்லை
பரம பிதா ஊட்டுகிறார்
மறப்பாரோ மகனே ( மகளே ) உன்னை – உயிர்
2 , கவலைப் படுவதினால்
நமது உயரத்திலே
ஒரு முழம் கூட்ட முடியுமா –
புது பெலன் பெறவும் கூடுமா
3 . நாளைய தினம் குறித்து
நம்பிக்கை இழக்காதே
நாளைக்கு வழி பிறக்கும் – நீ
இன்றைக்கு நன்றி சொல்லு
4 . தகப்பனின் விருப்பத்தையும்
அவரது ஆட்சியையும்
தேடுவோம் முதலாவது – நம்
தேவைகளை சந்திப்பார்