Back

294 . Ummai Nadi | உம்மை நாடி 

294 . உம்மை நாடி 

C – Maj / 4 / 4 | T – 110 

உம்மை நாடித் தேடும் மனிதர் 

உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும் 

உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர் 

மன அமைதி இன்று பெறட்டும் 

மகிமை மாட்சிமை , மாவேந்தன் உமக்கே 

துதியும் கனமும் , தூயோனே உமக்கே 

1 . என் பார்வை சிந்தை எல்லாம் 

நீர் காட்டும் பாதையில் தான் 

என் சொல்லும் செயலும் எல்லாம் 

உம் சித்தம் செய்வதில் தான் 

2 . உம்மை வருத்தும் வழியில் நடந்தால் 

என்னைத் திருத்த வேண்டும் தேவா 

கருத்தோடு உமது வசனம் 

கற்றுத்தந்து நடத்த வேண்டும் 

3 . உந்தன் வேதம் எனது உணவு 

நன்றி கீதம் இரவின் கனவு 

உந்தன் பாதம் போதும் எனக்கு 

அதுதானே அணையா விளக்கு 

4 . ஒரு நாளும் உம்மை மறவேன் 

ஒரு போதும் உடம்மை பிரியேன் 

மறு வாழ்வு தந்த நேசர் 

மணவாளன் மடியில் சாய்ந்தேன்

We use cookies to give you the best experience. Cookie Policy